இந்தியாவின் நலன் என்றும் பாதுகாக்கப்படும்!

இந்தியா, அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் விவசாயிகளை எந்த வகையிலும் பாதிக்காது  என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, பேசிய அவர் மத்திய பட்ஜெட்டின் பலன்களையும், சாதனைகளையும் மக்களிடம் எடுத்து கூறுங்கள் என்று கூறினார்.

இதையடுத்து, இந்தியா, அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தால் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவினரும் பயனடைவர் என்றும், விவசாயிகளை எந்த வகையிலும் பாதிக்காது என்றும் கூறினார். மேலும், இந்தியாவின் நலன்கள் வருங்காலத்திலும் தொடர்ந்து பாதுக்காக்கப்படும் எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *