சென்னையில் ரூ.1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் : விஜய் அதிரடி அறிவிப்பு.!

Advertisements

சென்னையில் 1200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பல்வேறு திட்டங்களை அறிவித்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சென்னையில் உலகத்தரம் வாய்ந்த ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும் எனத் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் ஒரு புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் உருவாக்கப்படும் என்றும், அதில் உலகத் தரத்திலான போட்டிகள் நடத்துவதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்படும் என அறிவித்தார்.

சென்னையில் 20 இலட்சம் சதுர அடிப் பரப்பில் 1200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சட்டமன்றம், தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகம் கட்டப்படும் என்று அறிவித்தார்.

அதில் போதுமான வாகன நிறுத்துமிடங்கள், மாநாட்டு அரங்குகள், பொதுமக்கள் சேவை மையங்கள் ஆகியன அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். அதில் அனைத்து அரசுத் துறைகளையும் ஒரே வளாகத்தில் கொண்டுவந்து ஒருங்கிணைக்கப்படும் எனத் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *