விவசாயிகளுக்கு உதவுவதில் பிரதமர் தாமதம் செய்ய மாட்டார் – அமித்ஷா

Advertisements

விவசாயிகளுக்கு உதவுவதில் பிரதமர் மோடி எப்போதும் தாமதம் செய்ய மாட்டார் என மராட்டிய மாநிலத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மராட்டிய மாநிலத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் நடத்தபட்ட விவசாயிகள் பேரணியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார்.

அப்போது பேசியஅவர், மராட்டியத்தில் முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே பா.ஜனதா தலைமையிலான அரசு, அவுரங்காபாத்தின் பெயரை அகில்யாபாய் என்று மாற்றம் செய்தது என்றும் சத்ரபதி சிவாஜி மீது பற்று கொண்டவர்கள் மட்டுமே இதனை செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.

கனமழை காரணமாக மராட்டியத்தில் அறுபது லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான விளைநிலங்கள் மற்றும் பயிர்கள் சேதமடைந்துள்ளன என்றும் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுடன் இதுகுறித்து ஆலோசனை நடத்தியதாகக் கூறினார்.

இதனை தொடர்ந்து, விவசாயிகளுக்கு உதவுவதில் பிரதமர் மோடி எப்போதும் தாமதம் செய்ய மாட்டார் என்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஒருமாத சம்பளத்தை நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளதாகக் கூறினார்.

இதனையடுத்து, நவராத்திரிக்கு முன்பாக, 395 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. சரக்கு சேவை வரி யை பிரதமர் மோடி குறைத்துள்ள நிலையில் பல அத்தியாவாசியப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியே இல்லை என்றும் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *