புதுடில்லி: ‛‛எளிய மொழியில், இந்திய மொழிகளில் சட்டங்களை உருவாக்க அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது” எனப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். PM Modi
டெல்லியில் நடைபெற்ற சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவின் நீதி அமைப்பின் பாதுகாவலர்களாக நீதித்துறையும் வழக்கறிஞர் சங்கமும் உள்ளன. பெண்கள் தலைமையிலான வளர்ச்சி, ஆற்றலை மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அளிக்கும்.
2047க்குள் இந்தியாவை வளர்ச்சியடையச் செய்யும் நமது இலக்கை அடைவதற்கான அடிப்படையாக வலுவான, பாரபட்சமற்ற நீதி அமைப்பு ஆகியன திகழ்கின்றன. எளிய மற்றும் இந்திய மொழிகளில் சட்டங்களை உருவாக்க அரசு முடிந்தளவு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
