PM Modi: கேரளமக்களுக்கு வாழ்த்து!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள மக்களுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்…

புதுடெல்லி: கேரளா மாநிலத்தில் இன்று ஓணம் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஓணம் பண்டிகையை யொட்டி, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கேரளாவில் அறுவடை மற்றும் மன்னன் மகாபலி வீடு திரும்புவதையொட்டி கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அம்மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “அனைவருக்கும் ஓணம் வாழ்த்துக்கள்! உங்கள் வாழ்க்கை நல்ல ஆரோக்கியம், இணையற்ற மகிழ்ச்சி மற்றும் மகத்தான செழிப்புடன் பொழியட்டும்” என்றும் கடந்த பல ஆண்டுகளாக, ஓணம் ஒரு உலகளாவிய பண்டிகையாக மாறியுள்ளது, மேலும் இது கேரளாவின் துடிப்பான கலாச்சாரத்தை அழகாக வெளிப்படுத்துகிறது” என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *