Panaji Car Accident: விடுதிக்குள் சீறி பாய்ந்த கார்!

கார் மோதியதில் தங்கும் விடுதியின் உரிமையாளர் பலியானார்.

பனாஜி: கோவா மாநிலம் வஹடார் பகுதியில் தங்கும் விடுதி உள்ளது. இதனிடையே, கடந்த சனிக்கிழமை இரவு விடுதியின் உரிமையாளரான ரெமிடியா மேரி (வயது 57) விடுதி வளாகத்தில் நின்றுகொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வேகமாக வந்த கார் விடுதிக்குள் புகுந்தது. கார் விடுதி உரிமையாளர் மற்றும் ஊழியர்கள்மீது மோதியது. இந்தக் கோர விபத்தில் விடுதி உரிமையாளர் ரெமிடியா மேரி படுகாயமடைந்தார். அவரை மீட்ட விடுதி ஊழியர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரெமிடியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கார் டிரைவரைக் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *