அம்பாசமுத்திரம், பெருந்துறை ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தச் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சென்னைப் பெரம்பூர், திருச்சிக் கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றிபெற்ற விஜய் திருச்சி கிழக்குச் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார். இதேபோலப் பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய ஐந்து சட்டமன்றத் சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்துவிட்டுப் பிறகு அந்தக் கட்சியில் இருந்து விலகித் தவெகவில் சேர்ந்துள்ளனர்.
இந்நிலையில் ஐந்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கத் தடை விதிக்கக் கோரிச் சென்னை உயர் நீதிமன்றத்தில் திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடாசலபதி மனு தாக்கல் செய்தார். அதில் இந்த 5 தொகுதிகளிலும் தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்குகள் உள்ளதால் இடைத்தேர்தல் நடத்தத் தடை விதிக்க வேண்டும் என்று கோரினார்.இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் ஆகியோர் 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கத் தடை விதித்தனர்.
இந்தத் தடையை நீக்கக் கோரி முதலமைச்சர் விஜய் உள்ளிட்டோர் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், அம்பாசமுத்திரம், பெருந்துறை சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த விதித்திருந்த தடையை நீக்கினர்.விராலிமலை, கரூர், திருச்சி கிழக்குத் தொகுதிகளில் தேர்தல் நடத்த விதித்த தடை நீடிக்கிறது என்று அறிவித்தனர். இந்த மூன்று தொகுதிகளிலும் வழக்கு முடிந்தால்தான் தேர்தல் நடத்த அனுமதிக்க முடியும் என்று தெரிவித்தனர்.
இவை போகச் சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியும் இப்போது காலியாக உள்ளது. இதனால் அம்பாசமுத்திரம், பெருந்துறை, கொளத்தூர் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் சனவரியில் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது.


