Patient Rape: மயக்க மருந்து கொடுத்துப் பெண் நோயாளி கற்பழிப்பு!

மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கற்பழித்த ஆஸ்பத்திரி ஊழியரைப் போலீசார் கைது செய்தனர்.

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 24 வயது திருமணமான பெண் நுரையீரல் தொற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அந்தப் பெண்ணை ஆஸ்பத்திரியின் ஆண் செவிலியர் ஒருவர் அதிகாலை 3.30 மணியளவில் மயக்க மருந்து கொடுத்துக் கற்பழித்துள்ளார். முதலில் ஆபாச செயல்களில் ஈடுபட்டுள்ளார். அதற்கு அந்தப் பெண் எதிர்ப்பு தெரிவித்ததும் மயக்க ஊசி போட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர் பெண்ணை அணுகுவது மருத்துவமனையின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதுதொடர்பாகப் போலீசில் அளித்த புகாரின் பேரில் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவமனையின் ஆண் செவிலியர் கைது செய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *