
Parvati Nair : அபுதாபியில் பிறந்து இன்று தமிழ் மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் அசத்தி வரும் முன்னணி நடிகை தான் பார்வதி நாயர், அவருக்கு வயது 31.
கேரளாவை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும், அபுதாபி நாட்டில் பிறந்து தனது பதினைந்தாவது வயதிலேயே மாடலிங் துறையில் களமிறங்கிய நடிகை தான் பார்வதி நாயர். மலையாள மொழி திரைப்படங்கள் மூலம் இவர் அறிமுகமானார்.
தமிழ் மொழியை பொறுத்தவரை, கடந்த 2015ம் ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளியான “என்னை அறிந்தால்” என்கின்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். அப்படத்தில் நடித்ததற்காக அவருக்கு Flimfare விருது கிடைத்தது.
தொடர்ச்சியாக மலையாளம் மற்றும் தமிழ் மொழியில் அதிக அளவில் படங்களில் நடித்து வரும் பார்வதி நாயர் கன்னடம் மற்றும் ஹிந்தி மொழியிலும் தலா ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியாக தமிழில் மக்கள் செல்வனின் “சீதக்காதி” என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை பார்வதி நாயர், தற்பொழுது தளபதி விஜயின் “GOAT” மற்றும் “ஆலம்பனா” உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

