Parliament Budget Session 2024:23ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

புதுடில்லி: பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 22ம் தேதி கூடுகிறது. மறுநாள் மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: மத்திய அரசின் பரிந்துரைப்படி பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரை ஜூலை 22 முதல் ஆக., 12 வரை நடத்துவதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்து உள்ளார். 2024 – 25ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் 23ம் தேதி லோக்சபாவில் தாக்கல் செய்யப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் மூன்றாவது முறையாகத் தேஜ கூட்டணி அரசு அமைந்த பிறகு, தாக்கல் செய்யப்படும் முழு நேர பட்ஜெட் இதுவாகும். நிர்மலா சீதாராமன் ஏழாவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *