Paralympics: இந்திய வீராங்கனை சிம்ரன் இறுதிப்போட்டிக்கு தகுதி!

பாரா ஒலிம்பிக் தொடரில் இந்தியா இதுவரை 24 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

பாரீஸ்:மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

இந்த தொடரில் இந்தியா இதுவரை 5 தங்கம், 9 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களைப் பெற்று 13-வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 100 மீட்டர் டி-12 ஓட்டப்பந்தயம் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை சிம்ரன் சர்மா 12.33 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து 2-வது இடம்பிடித்தார். இதன்மூலம் இறுதிப் போட்டிக்கு அவர் தகுதி பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *