பேட்மிண்டன் அரையிறுதியில் இந்தியா vs இந்தியா மோதல்..!

தென்கொரியாவின் அசன் நகரில்  நடைபெற்ற கொரியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் அரையிறுதிச் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா, ரக்ஷிதா ஸ்ரீ உடன் மோதுகிறார்.

தென்கொரியாவின் அசன் நகரில் கொரியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி நடைபெறுகிறது. இதில், பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் உலக தரவரிசையில் 50 ஆவது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை அஷ்மிதா சாலிஹா 20-22, 21-5, 21-19 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 22 ஆவது இடத்தில் உள்ள ஜப்பானின் ஹினா அகிசிக்கு அதிர்ச்சி அளித்து அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு காலிறுதிப்போட்டியில் இந்தியாவின் ரக்ஷிதா ஸ்ரீ 18-21, 21-19, 21-18 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனை தன்வி ஷர்மாவை வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.  இதைத் தொடர்ந்து, ரக்ஷிதா ஸ்ரீ  அரையிறுதியில் அஷ்மிதா சாலிஹாவுடன் விளையாடுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *