Pakistan Election 2024: தேர்தல் களத்தில் முதல் இந்துப் பெண்!

Advertisements

பெண்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கும் நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. ஹிஜாப் அணிவது முதற்கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகள் பெண்களுக்கு உண்டு.

அப்படிப்பட்ட நாட்டில் வரலாற்றில் முதன்முறையாக பாகிஸ்தானில் அதுவும் ஒரு இந்துப் பெண் தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்ற செய்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நமது அண்டை நாடான பாகிஸ்தானில்  வருகிற பிப்ரவரி மாதம் 8-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 266 இடங்கள் மற்றும் 4 மாகாண சட்டபேரவைக்கான 600 இடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கியது.

நடைபெறவுள்ள  தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-என், இம்ரான் கான் தலைமையிலான தெக்ரீக்-இ-இன்சாப், மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தவர்களில் இந்து சமூகத்தை சேர்ந்த பெண்  சவீரா பிரகாஷ். குறிப்பிடத்தக்கவர். கைபர் பக்துன்காவின் புனர் மாவட்டத்தில் உள்ள தொகுதியில் (PK-25) பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இவரது தந்தை ஓம் பிரகாஷ் ஓய்வு பெற்ற மருத்துவர்.

சவீரா பிரகாஷ் கடந்த ஆண்டு கைபர் பக்துன்காவின் அபோதாபாத் சர்வதேச மருத்துவ கல்லூரியில் படிப்பை முடித்தார். பாகிஸ்தான் மக்கள் கட்சியின் புனர் மாவட்ட பெண்கள் பிரிவு பொது செயலாளராக உள்ளார். பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் பொது இடங்களில் ஐந்து சதவீதம் பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சவீரா பிரகாஷ் அளித்துள்ள பேட்டியில் “தனது தந்தையின் வழியை பின்பற்றி பின்தங்கிய மக்களுக்காக பணியாற்றுவேன். பெண்கள் முன்னேற்றத்துக்காகவும், அவர்களின் உரிமைக்காகவும் பாடுபடுவதற்காகவும் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்துள்ளேன்” தெரிவித்துள்ளார். இந்து பெண் ஒருவர் பாகிஸ்தானில் வேட்பு மனு செய்துள்ளது அனைவரையும் குறிப்பாக இந்தியர்களுக்கு ஆனந்தத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *