Ooty Mountain Train: ரயில் சேவை தொடக்கம்!

கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக தென் மாவட்டம் முழுவதும் பலத்த சேதம் ஏற்பட்டது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. முக்கியமாக போக்குவரத்து மிகவும் ஸ்தம்பித்தது. பேருந்து மற்றும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மண் சரிவு ஏற்பட்டு ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.  இதனால் சுற்றுலா பயணிகள் வரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது.

இதன் காரணமாக இம்மாத தொடக்கம் முதலே தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. இதில் நீலகிரி மாவட்டத்திலும் கனமழை பெய்தது. இதன் காரணமாக மலை ரயில் பாதைகளில் மண் சரிவு ஏற்பட்டது. இதில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு பாதை சரி செய்யப்பட்டது.

மேலும்  நிலையில் மீண்டும் பெய்த மழையால் கில் குரோவ் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் மண் மற்றும் பாறைகள் சரிந்தது. இதன் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்ததால் மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் போக்குவரத்து கடந்த 3 நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்தது.

சீரமைப்பு  பணிகள் முடிந்து தண்டவாளங்கள் சரி செய்யப்பட்டுள்ளது. இதனால் மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இச் செய்தி சுற்றுலா பயணிகளை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *