Kanchipuram: 600 கிலோ புகையிலை பொருட்களை எரியூட்டி அழித்த அதிகாரிகள்!

Advertisements

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட  600 கிலோ புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு அலுவலர் முன்னிலையில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார்  எரியூட்டி அழித்தனர்.

தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் விற்பனையைத் தடுக்கும் வகையில் பான்பராக், குட்கா கூலிப் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்குத் தமிழ் நாடு அரசுத் தடை விதித்து உள்ளது.தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் பல்வேறு விதமான நடவடிக்கைகளைக் காவல்துறையும் உணவு பாதுகாப்பு துறையும் மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் அவ்வப்போது காவல்துறையினர் மூலமும் உணவு பாதுகாப்பு துறையினர் மூலமும் வணிக நிறுவனங்களிலும் சிறு கடைகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவ்வாறு நடைபெறும் சோதனைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களைப் பறிமுதல் செய்து கடைகளுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் சீல் வைத்து எச்சரிக்கை நோட்டீஸ் அளித்தும், கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில்காஞ்சிபுரம் காவல் துறை உட்கோட்டத்திற்கு உட்பட்ட விஷ்ணு காஞ்சி, சிவகாஞ்சி, காஞ்சிபுரம் தாலுக்கா, பாலு செட்டி சத்திரம், வாலாஜாபாத், மாகரல், பெருநகர், உத்திரமேரூர், சாலவாக்கம், உள்ளிட்ட காவல் நிலையங்கள் மூலமாகவும் காஞ்சிபுரம் மதுவிலக்கு போலீசார் மூலமாகவும் பல்வேறு பகுதிகளில் சோதனை செய்து பறிமுதல் செய்யப்பட்ட 15 லட்சம் மதிப்பிலான 600 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவின் படி, பறிமுதல் செய்யப்பட்ட 600 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களைக் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்கில் வைத்துமாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா, காஞ்சிபுரம் மதுவிலக்கு அமல் பிரிவு டிஎஸ்பி சுரேஷ் குமார், மாநகராட்சி சுகாதார அலுவலர் அருள் நம்பி ஆகியோர் முன்னிலையில் போலீசாரும், மாநகராட்சி ஊழியர்களும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை மீது பெட்ரோல் உற்றி எரியூட்டி அழித்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *