
டெல்லியில் நாட்டை ஆளுகின்ற நிலை தேசிய கட்சிகளுக்குத் தான் உள்ளது, ஆகவே பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் தான் தமிழகத்திலும் கூட்டணி அமையும் எனக் காஞ்சிபுரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கூறினார்.
அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், அதிமுக கொடியையும் சின்னத்தையும் பயன்படுத்த நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.
இந்நிலையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வம், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் மீட்பு குழு சார்பாக நிர்வாகிகளிடம் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறார்.
மேலும் தற்பொழுது 2024 மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஓபிஎஸ் அணி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ளும் கூட்டம் ஓபிஎஸ் அணி காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் ஆர்வி. ரஞ்சித் குமார் தலைமையில் சின்னக் காஞ்சிபுரத்தில் உள்ள துளசி மஹாலில் நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.கூட்டத்தி
ல் ஓபிஎஸ் அணியின் நிர்வாகிகளான வைத்தியலிங்கம், ஜேசிடி.பிரபாகரன், புகழேந்தி, உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகளும் கலந்து கொள்கின்றனர். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், நாட்டை நாளை யார் ஆளப்போவது என்பதற்கான நாடாளுமன்றத் தேர்தல்மாண்புமிகு பாரத பிரதமர் 10 ஆண்டுக் காலம் ஆட்சி சிறப்பாக இருந்தது, அடுத்து வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் கூட நரேந்திர மோடி தான் பாரதப் பிரதமராக வர வேண்டும்.
டெல்லியில் நாட்டை ஆளுகின்ற நிலை தேசிய கட்சிகளுக்குத் தான் உள்ளது ஆகவே பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் தான் தமிழகத்திலும் கூட்டணி அமையும். உறுதியாக நாங்கள் கூறிய நிதியைப் பொங்கல் தொகுப்பு அரசு வழங்க வேண்டும் இல்லை என்றால் அதைக் கொடுக்கிற வரைக்கும் எங்களுடைய கோரிக்கை வலுவாக இருக்கும். ரகசியங்கள் வெளியே சொல்ல வாய்ப்பு உள்ளதா ?எனச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பொறுத்திருந்து பாருங்கள்என ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


