அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சிறப்பு வசதி வழங்கவில்லை!அமைச்சர் ரகுபதி தகவல் !

Advertisements

புழல் சிறையில் செந்தில்பாலாஜிக்கு சிறப்பு வசதி வழங்கவில்லை என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எந்தவொரு சிறப்பு வசதியும் வழங்கப்படவில்லை. முதல் வகுப்பு சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் தவிர வேறு எந்த சலுகைகளும் சிறைத்துறை சார்பில் வழங்கப்படவில்லை.

நீதிமன்றங்களில் அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் படங்களை அகற்ற எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை, தற்போதைய நடைமுறையே தொடரும் என தலைமை நீதிபதி கூறிவிட்டார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் யார் யாரெல்லாம் தவறு செய்தார்களோ சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். மேகதாது அணை விவகாரம் குறித்து மத்திய மந்திரியை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *