
பிரபல நடிகர் 2 மகள்களுடன் சென்ற விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்துக்கான காரணம்குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
வாஷிங்டன்: பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டின் ஆலிவர் (வயது 51). ஸ்பீட் ரேசர், இண்டியானா ஜோன்ஸ், ஹண்டர்ஸ் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
கிறிஸ்டின் ஆலிவரின் மனைவி ஜெசிகா. இந்தத் தம்பதிக்கு அகிக் (வயது 10), மடிடா லிப்சர் (வயது 12) என இரு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், கிறிஸ்டின் தனது குடும்பத்துடன் அமெரிக்காவின் கரீபியன் தீவுகளுக்குச் சுற்றுலா சென்றுள்ளார். அந்த வகையில் நேற்று மதியம் கிறிஸ்டின் தனது 2 மகள்களுடன் சிறிய ரக தனி விமானம்மூலம் பிக்யுயா தீவிலிருந்து ஜெயிண்ட் லுசியா நோக்கிப் புறப்பட்டார்.
புறப்படச் சில நிமிடங்களில் விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நடிகர் கிறிஸ்டின், மகள்கள் அகிக், மடிடா லிப்சர், விமானி ராபர்ட் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்துகுறித்து அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்துக்கான காரணம்குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

