
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் தொடர் போட்டியில் பங்கேற்றுள்ளது.
இதில், முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்று 1-1 எனக் கணக்கில் சம நிலையில் உள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இந்தூரில் நடைபெறுகிறது. இந்தப், போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வெல்லும் ஆர்வத்துடன் இருக்கிறது.
எனவே, வெற்றியுடன் கோப்பையை வெல்ல போவது யார்? என ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு உள்ளது…


