NehruTrophy BoatRace:ஆண்களுக்குப் போட்டியாக இந்தாண்டில் பெண்களுக்கும் வாய்ப்பு!

Advertisements

திருவனந்தபுரம்: கேரளா மாநிலம், ஆலப்புழாவில் ஆண்டுதோறும் நடக்கும் பாம்புப் படகு போட்டியில், இந்தாண்டு பெண்கள் அணியினரும் பங்கேற்கினறனர்.

கிழக்குலக நாடுகளின் வெனிஸ் என்று கொண்டாடப்படுவது, கேரளாவின் ஆலப்புழா நகரம். இங்குள்ள புன்னமடா ஏரியில் ஆண்டுதோறும் பாம்புப் படகுப் போட்டிகள், வெகுபிரபலம். அதைக் கண்டு ரசிக்க, உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப்பயணிகள் வந்து செல்வர்.கடந்த 1952ம் ஆண்டு அப்போதைய பிரதமர் நேருவால் தொடங்கி வைக்கப்பட்ட இந்தப் போட்டிகள், அடுத்தாண்டு முதல் நேரு டிராபி படகுப்போட்டி என்ற பெயரில் நடத்தப்படுகின்றன.

வழக்கமாக இந்தப் போட்டிகளில் ஆண்கள் மட்டுமே பங்கேற்பர். இந்தாண்டு முதல் பெண்கள் அணியினரும் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக, அணிக்கு 30 பெண்கள் படகோட்டிகளாக இருப்பர். ஒவ்வொரு படகிலும், ஆண்கள் 5 பேரும் இருக்க அனுமதிக்கப்படுவர் என்று போட்டி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.இந்தாண்டு நடக்கும் போட்டியில், 19 பாம்புப் படகுகள் உட்பட 75 பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. செப்.,28ம் தேதி போட்டிகள் நடக்கின்றன. படகு ஓட்டும் மீன் கொத்தி, இந்தாண்டு படகுப்போட்டியின் லோகோவாக அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டிகளுக்கான கடைசி நேர ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *