நரேந்திர மோடி இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடி இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

டில்லியில் உள்ள பாலயோகிக் கலையரங்கில் நடைபெற்ற என்.டி.ஏ நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றினார். இதில் பாஜக கட்சி உறுப்பினர்கள்,  அமைச்சர்கள், நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து இந்தியத் துணை ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்ட மகாராஷ்டிரா மாநில ஆளுநருமான இராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக வருகைப் புரிந்தார்.

பின்னர் பிரதமர்  நரேந்திர மோடி இராதாகிருஷ்ணன் அவர்களுக்குச் சால்வை அணிவித்து மலர் கொத்துகளைக் கொடுத்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *