
மும்பை பெண்கள் ஓப்பன் டென்னிஸ் போட்டிக்கான போஸ்டரைப் போட்டி அமைப்பாளர்கள் வெளியிட்டனர்.
மும்பை: மும்பை ஓப்பன் டென்னிஸ் மற்றும் மராத்திய மாநில டென்னிஸ் சங்கம் நடத்தும் மும்பை ஓப்பன் டென்னிஸ் போட்டி பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி தொடங்குகிறது. இறுதிப்போட்டி 11ஆம் தேதி நடக்கிறது. இப்போட்டியில் 31 நாடுகளைச் சேர்ந்த 100க்கும் அதிகமான வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். குறிப்பாக அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
விளையாட 4 இந்திய வீராங்கனைகள் நேரடியாகத் தகுதிப்பெற்றுள்ளனர். வைஷ்ணவி அட்கர், அங்கிதா ரெய்னா, சகாஜா யமலாப்பள்ளி, ருதுஜா, போஸ்லே ஆகியோர் மும்பை ஓப்பன் டென்னிஸில் ஆடவுள்ளனர். வைஷ்ணவி அட்கர் மற்றும் ருதுஜா போஸ்லே மகாராஷ்டிராவை சார்ந்தவர்கள்.
மேலும், ருதுஜா போஸ்லே சகாஜா யமலாப்பள்ளி மற்றும் அங்கீதா ரெய்னா ஆகியோர் இந்திய அளவில் டென்னிஸ் வீராங்கனை தரவரிசையில் முதல் மூன்று இடத்தில் உள்ளனர். இதற்கான தகுதி சுற்றுப்போட்டிகள் பிப்ரவரி 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
தகுதி சுற்றில் கலந்து கொண்டு மேலும் சில இந்திய டென்னிஸ் வீராங்கனைகள் போட்டியில் இடம்பெறுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், நேற்று மும்பை பெண்கள் ஓப்பன் டென்னிஸ் போட்டிக்கான போஸ்டரைப் போட்டி அமைப்பாளர்கள் வெளியிட்டனர்.

