Mumbai-Ahmedabad Bullet Train : மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் !

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தில்  ரயில் பாதைக்கான மேம்பாலப் பணிகள் 300 கி.மீ. வரை  நிறைவு பெற்றிருப்பதாகத் தேசிய அதிவேக ரயில் கழகம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பை-குஜராத் அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டப் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் 14 ஆறுகள்மீதான ரயில் பாலம், 0.9 கி.மீ. நீளமுள்ள  இரும்புப் பாலம், 1.2 கி.மீ. நீளமுள்ள கான்கிரீட் பாலம், என மொத்தம் 300 கி.மீ. நீளமுள்ள  ரயில் பாதைக்கான மேம்பாலப் பணி நிறைவடைந்துள்ளது. இதேபோல்   தூண்கள் அமைக்கும் பணியும், அடித்தளம் அமைக்கும் பணியும், நிறைவடைந்துள்ளது. இந்த மேம்பாலங்களில் ரயில்கள் இயங்கும்போது ஏற்படும் இரைச்சலைக் கட்டுப்படுத்தும் வகையில், 3 லட்சத்துக்கும் அதிகமான ஒலி தடுப்பான்கள் அமைக்கப்பட்டுள்ளன. 1.08 லட்சம் கோடி ரூபாய் செலவில் ஜப்பான் நாட்டின் உதவியுடன் இந்தப் புல்லட் ரயில் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *