முன்னாள் அமைச்சர் கக்கன் குறித்த திரைப்படம் ! ஒலிநாடா, டிரெய்லரை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

Advertisements

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை, காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் கக்கன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் “கக்கன்” திரைப்படத்தின் ஒலிநாடா மற்றும் முன்னோட்ட காட்சியை (Trailer) வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழ் வளர்ச்சி மற்றம் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திரு.ஜே.எம்.எச். அசன் மௌலானா, மருத்துவர் நா. எழிலன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு.கே.எஸ். அழகிரி, காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் திரு. கோபண்ணா, கக்கன் அவர்களின் மகள் திருமதி கே. கஸ்தூரி பாய், பேத்தியும் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவருமான திருமதி எஸ். ராஜேஸ்வரி, இ.கா.ப., இசையமைப்பாளர் திரு. தேவா, தயாரிப்பாளர் திரு. ஜோசப் பேபி மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *