
கிரக மாற்றம்
புரட்டாசி 14 01-10-2023 கன்னி புதன் இரவு 08.39
புரட்டாசி 15 02-10-2023 சிம்ம சுக்கிரன் அதிகாலை 01.02
புரட்டாசி 16 03-10-2023 துலா செவ் மாலை 05.58
புரட்டாசி 21 08-10-2023 ராகு-மீனம் கேது-கன்னி (வா) மதியம் 03.30
ஐப்பசி 01 18-10-2023 துலா சூரியன் அதிகாலை 01.29
ஐப்பசி 02 19-10-2023 துலா புதன் அதிகாலை 01.02
ஐப்பசி 13 30-10-2023 ராகு-கேது மாலை 04.40
மேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்

அன்புள்ள மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலங்கள் உண்டாகும். எதையும் தைரியத்துடன் எதிர்கொண்டு ஏற்றங்களை பெறுவீர்கள். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். குரு வக்ர கதியில் இருப்பதால் பண விஷயத்தில் சிக்கனத்தோடு இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது.
கையில் இருப்பதை கொண்டு செலவு செய்தால் கடனில்லாத வாழ்க்கை வாழலாம். கணவன்- மனைவி இடையே வாக்கு வாதங்களை தவிர்த்து விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவுக்கு ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலை இருந்தாலும் வர வேண்டிய வாய்ப்புகளில் தடை ஏற்படாது. எதிர்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும்.
வேலையாட்களின் ஒத்துழைப்பு இருக்காது என்பதினால் எதிலும் நீங்களே முன்நின்று செயல்படுவது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்கள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலமான பலன்களை அடைய முடியும்.
பரிகாரம் – செவ்வாய்க்கிழமை முருக வழிபாடு செய்வது, ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்தால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
சந்திராஷ்டமம் – 17-10-2023 பகல் 02.20 மணி முதல் 19-10-2023 இரவு 09.03 மணி வரை.
ரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய், மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் எல்லாம் விலகி அனுகூலமான பலன்கள் ஏற்படும். தொழில் வியாபார ரீதியாக லாபகரமான பலன்களை அடைவீர்கள். எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கும். பயணங்களால் நற்பலன்கள் கிட்டும்.
குரு, சனி வக்ர கதியில் இருப்பதால் உங்களின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன், பொருள் வாங்கும் வாய்ப்பு அமையும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் எண்ணங்கள் ஈடேறும் வாய்ப்பும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். திருமண சுபகாரிய முயற்சிகளில் இருந்த இடையூறுகள் நீங்கி சாதகமான பலன் கிட்டும்.
உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. உற்றார் உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் நல்ல நிலையில் நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும். வெளியூர், வெளிநாடுகளில் பணிபுரிவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு இருப்பவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி கிடைக்கும்.
பரிகாரம் – வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி வழிபாட்டையும், அம்மன் வழிபாட்டையும் செய்து வந்தால் குடும்பத்தில் சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.
சந்திராஷ்டமம் -19-10-2023 இரவு 09.03 மணி முதல் 22-10-2023 அதிகாலை 01.38 மணி வரை.
மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. பொருளாதார ரீதியாக சில நெருக்கடிகள் ஏற்பட்டாலும் உங்கள் ராசிக்கு புதன் 4-லும், ராகு 11-லும் இருப்பதால் எதிர்பாராத சில உதவிகள் கிடைத்து அதன் மூலம் உங்கள் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு கிடைப்பதுடன் உங்கள் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ள முடியும்.
குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். கணவன்- மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.
உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது, உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் உழைப்பிற்கான பலன்களை அடைய இடையூறுகள் உண்டாகும். எந்த எதிர்ப்புகளையும் சமாளித்து எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள்.
கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் சற்று அனுசரித்து நடப்பதன் மூலம் நற்பலன்கள் உண்டாகும். வெளியூர் தொடர்புகளால் நற்பலன்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும்.
பரிகாரம் – பிரதோஷ காலங்களில் சிவ பெருமானுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்வது, சதுர்த்தியன்று விநாயகருக்கு அருகம்புல் கொண்டு அர்ச்சனை செய்வதால் நற்பலன்கள் கிடைக்கும்.
சந்திராஷ்டமம் – 22-10-2023 அதிகாலை 01.38 மணி முதல் 24-10-2023 அதிகாலை 04.22 மணி வரை.
கடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்

அன்புள்ள கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் மாத முற்பாதியில் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். குரு, சனி வக்ர கதியில் இருப்பதால் கடந்த கால நெருக்கடிகள் எல்லாம் சற்று குறைந்து ஒரு சில சாதக பலன்களை பெறுவீர்கள். தாராள தனவரவுகள் உண்டாகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றி கிடைக்கும். கணவன்- மனைவியிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும்.
சிலருக்கு புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. கடன் பிரச்சினைகள் சற்றே குறையும். அசையும் அசையா சொத்துக்கள் வகையில் சுபசெலவுகள் ஏற்படும். ஆன்மீக பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஆதரவாக இருப்பார்கள்.
கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருந்தாலும் பெரிய தொகைளை ஈடுபடுத்தும் போது சற்று கவனமாக இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி லாபம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மற்றவர்கள் வேலையும் சேர்த்து செய்ய வேண்டிய நெருக்கடியான நிலை ஏற்பட்டு மனநிம்மதி குறையும்.
எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் கிடைப்பதில் தடை தாமதங்கள் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்கள் சற்றே அலைச்சலை சந்திக்க நேர்ந்தாலும் எதிர்பார்த்த நற்பலனை அடைய முடியும்.
பரிகாரம் – முருக வழிபாடு செய்வதாலும், சஷ்டி மற்றும் கிருத்திகை விரதம் மேற்கொள்வதாலும் அனைத்து துயரங்களும் நீங்கி வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.
சந்திராஷ்டமம் – 24-10-2023 அதிகாலை 04.22 மணி முதல் 26-10-2023 அதிகாலை 05.57 மணி வரை.
சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்

அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஒரு வளமான பலன்களை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபமும் வெற்றியும், நினைத்ததை நிறைவேற்ற கூடிய பலமும் ஏற்படும். எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களுக்குள்ள நெருக்கடிகள் எல்லாம் குறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும்.
ஆடம்பர செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்தமான நிலை இருக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். வேலையாட்களை அனுசரித்து செல்வது, பெரிய முதலீடு கொண்ட செயல்களை தற்போதைக்கு தவிர்ப்பது நல்லது.
உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் ஒரளவுக்கு அனுகூலங்கள் உண்டாகும். வீடு மற்றும் வாகன பராமரிப்பிற்காக செலவுகள் செய்ய நேரிடும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தைப் பெற முடியும் என்றாலும் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் தடையின்றிக் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகும். வேலைபளு குறைவாகவே இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.
பரிகாரம் – புதன் கிழமைகளில் விஷ்ணு பகவான் வழிபாடும், வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி வழிபாடும் செய்து வந்தால் நன்மைகள் பல உண்டாகும்.
சந்திராஷ்டமம் – 26-10-2023 அதிகாலை 05.57 மணி முதல் 28-10-2023 காலை 07.30 மணி வரை.
கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள கன்னி ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சூரியன், 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக் கொண்டு எதிலும் உணர்ச்சி வசப்படாமல் பொறுமையோடு செயல்பட வேண்டிய நேரமாகும். சனி வக்ர கதியில் இருப்பதால் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு மருத்துவ செலவுகள் ஏற்பட்டு மனநிம்மதி குறையும். உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடுடன் இருப்பது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.
பணவரவுகள் ஏற்ற, இறக்கமாக தான் இருக்கும். முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது, எதிலும் சிக்கனத்தோடு இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் குடும்ப ஒற்றுமை குறையும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது, தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது உத்தமம். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளை தற்போதைக்கு தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது முலம் வீண் பிரச்சினைகளில் இருந்து தப்பித்து கொள்ள முடியும். வேலைபளு அதிகரித்தாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும்.
கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு செயலிலும் கவனமாக செயல்பட்டால் தான் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பானது அவ்வளவு சிறப்பாக இருக்காது என்பதால் எந்த ஒரு வேலையையும் நீங்களே முன்நின்று செய்வது மிகவும் நல்லது.
பரிகாரம் – சிவாலயங்களுக்குச் சென்று சிவவழிபாடு செய்வதும், ராகு காலங்களில் துர்கையம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வதும் சிறப்பான பலனை கொடுக்கும்.
சந்திராஷ்டமம் – 30-09-2023 இரவு 09.10 மணி முதல் 02-10-2023 இரவு 12.15 மணி வரை மற்றும் 28-10-2023 காலை 07.30 மணி முதல் 30-10-2023 காலை 10.28 மணி வரை.
துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள துலா ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் செவ்வாய், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக் கொண்டு பொறுமையோடு செயல்பட வேண்டும். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் நிதானத்தோடு இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் சற்று மந்தநிலை ஏற்படும்.
பணவரவுகளில் ஏற்ற, இறக்கமான நிலை இருந்தாலும் சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து அதன் மூலம் இருக்கக்கூடிய பிரச்சினைகளை சமாளிக்க முடியும். வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை நிலவ கணவன்- மனைவி விட்டு கொடுத்து செல்வது, வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது மூலம் வீண் விரயங்களை தவிர்க்கலாம். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவுகளை பெற முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் செயல்களை தற்போதைக்கு தவிர்ப்பது உத்தமம்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருந்தால் தேவையற்ற நெருக்கடிகளை தவிர்க்கலாம். அதிகாரிகள் சொல்படி கேட்டு நடந்து கொண்டால் எதையும் எதிர்கொள்ள முடியும். நீங்கள் சற்று பொறுமையோடு இருந்தால் விரைவில் ஒரு நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
பரிகாரம் – சனிக்கிழமைகளில் விரதம் இருந்து மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் மன சங்கடங்கள் குறையும்.
சந்திராஷ்டமம் – 02-10-2023 இரவு 12.15 மணி முதல் 05-10-2023 காலை 06.58 மணி வரை மற்றும் 30-10-2023 காலை 10.28 மணி முதல் 01-11-2023 மாலை 04.10 மணி வரை.
விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை

அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் சுக்கிரன், 11-ல் புதன், மாத முற்பாதியில் 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்க கூடிய நேரமாக வருகின்ற நாட்கள் இருக்கும். பெண்கள் வழியில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள்.
எதிர்பாராத தன சேர்க்கைகள் ஏற்பட்டு உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு அமையும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும்.
பிள்ளைகள் வகையில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். பணம் கொடுக்கல்- சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களையும் தடையின்றி வசூலிக்க முடியும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைத்து சிறப்பான லாபங்களை அடைவீர்கள். திறமை வாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலில் இணைவார்கள்.
சந்தை சூழ்நிலை சாதகமாக இருப்பதால் அதிகப்படியான அனுகூலங்களை பெற முடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் விலகி நல்ல நிலையினை எட்ட முடியும். தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். நிலுவையில் இருந்த சம்பளத் தொகைகள் கைக்கு கிடைக்கும்.
புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும்.
பரிகாரம் – விநாயகர் வழிபாட்டை மேற்கொள்வது, சதுர்த்தி விரதம் கடைப்பிடிப்பது, சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது மிகவும் நல்லது.
சந்திராஷ்டமம் – 05-10-2023 காலை 06.58 மணி முதல் 07-10-2023 மாலை 05.18 மணி வரை.
தனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்

அன்புள்ள தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சூரியன், புதன் 10, 11-ல் சஞ்சரிக்க இருப்பதால் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள்.
தொழில் உத்தியோக ரீதியாக நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவதில் இருந்த தடைகள் யாவும் விலகும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பு கிட்டும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மனநிம்மதி உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பது மட்டுமில்லாமல் புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள்.
வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகவும் நன்றாக இருக்கும். ஒரு சிலருக்கு தொழில் வளர்ச்சிக்காக முதலீடு செய்யக் கூடிய வாய்ப்புகளும், நவீன கருவிகளை வாங்கக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்களும் ஏற்படும். அரசு அதிகாரிகளின் ஆதரவும் சிறப்பாக இருப்பதால் எதிர்பார்த்த உத்தரவுகள் கிடைக்கப் பெற்று மனமகிழ்ச்சி உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.
பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே மந்த நிலை கை கால் அசதி சோர்வு போன்றவை ஏற்பட்டாலும் அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் எந்த சிக்கலும் ஏற்படாது. கணவன்- மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதி நிலவும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும்.
பரிகாரம் – புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி தேவியை தாமரை மலர் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டால் சுப செய்திகள் இல்லம் தேடி வரும்.
சந்திராஷ்டமம் – 07-10-2023 மாலை 05.18 மணி முதல் 10-10-2023 அதிகாலை 05.45 மணி வரை.
மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய், 9, 10-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். பணவரவுகள் சாதகமாக இருந்து உங்களது தேவைகள் பூர்த்தியாகும். குரு, சனி வக்ர கதியில் இருப்பதால் கடந்த கால நெருக்கடிகள் எல்லாம் சற்று குறைந்து அனுகூலமான பலன்களை பெறுவீர்கள்.
ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கடன்களும் சற்றே குறையும். குடும்பத்திலிருந்து வந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலவும். கணவன்- மனைவி இடையே பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகளும் விலகும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் பொழுது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது.
உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. உற்றார் உறவினர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில், வியாபாரத்தில் துணிந்து செயல்பட்டு நல்ல லாபங்களை பெறுவீர்கள். உங்களுடைய பொருட்களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைப்பதால் கடந்த கால சோதனைகள் எல்லாம் விலகி நல்ல வளர்ச்சி அடைவீர்கள்.
உடனிருப்பவர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பதால் கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்க முடியும். உத்தியோக ரீதியாக பணியில் நிம்மதியுடன் செயல்படக்கூடிய நிலையும், விரும்பிய மாற்றங்களை அடையும் யோகமும் உண்டு. நீண்ட நாட்களாக உங்களுக்கு வரவேண்டிய சம்பள பாக்கிகள் தற்போது கிடைத்து உங்களுடைய அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும்.
பரிகாரம் – வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் குருவின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். சிவ வழிபாடு செய்வதும் நல்லது.
சந்திராஷ்டமம் -10-10-2023 அதிகாலை 05.45 மணி முதல் 12-10-2023 மாலை 06.15 மணி வரை.
கும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 8-ல் சூரியன் மாத முற்பாதியில் சஞ்சரிப்பதால் எதிலும் கவனத்தோடு இருக்க வேண்டிய நேரம் ஆகும். தேவையற்ற அலைச்சல்களால் உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை செய்ய நேரிடும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.
ஜென்ம ராசியில் சனி, 8-ல் புதன் சஞ்சரிப்பதால் எதிலும் சிந்தித்து செயல்பட வேண்டிய காலமாகும். முன்கோபத்தை குறைப்பது, பேச்சில் நிதானத்துடன் இருப்பது நல்லது. நெருங்கியவர்களை அனுசரித்து செல்வதும், மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதும் உத்தமம். பணவரவுகள் சிறப்பாக அமைவதுடன் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறுவதால் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து விடுவீர்கள்.
கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நிதானமாக இருப்பது நல்லது. உடனிருப்பவர்களால் இடையூறுகள் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. கணவன்- மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறைந்து குடும்பத்தில் அமைதியும் நிம்மதியும் நிலவும். உற்றார் உறவினர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் அவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
திருமண சுபகாரியங்களில் சாதகமான பலன் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். வரவேண்டிய வாய்ப்புகளும் வந்து சேரும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலமான பலன்களும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் சிறு தடைக்குப்பின் கிட்டும். வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது உத்தமம்.
பரிகாரம் – சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவதும், சனிக்கவசம் படிப்பதும், உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வதும் நல்லது.
சந்திராஷ்டமம் – 12-10-2023 மாலை 06.15 மணி முதல் 15-10-2023 அதிகாலை 05.20 மணி வரை.
மீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

அன்புள்ள மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 7, 8-ல் சூரியன், 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நிம்மதி குறைவு உண்டாகும். உடன் இருப்பவர்களே உங்களுக்கு நெருக்கடிகளை உண்டாக்குவார்கள். குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். முன்கோபத்தை குறைப்பது, பேச்சில் நிதானத்துடன் இருப்பது நல்லது.
உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதும், மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதும் உத்தமம். பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருக்கும் என்றாலும் குரு வக்ர கதியில் இருப்பதால் எதிலும் கவனத்தோடு இருக்க வேண்டிய காலமாகும். பணவிஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.
அசையும், அசையா சொத்துக்கள் விஷயத்தில் நிதானமாக செயல்பட்டால் வீண் விரயங்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. கொடுத்த கடனை பெறுவதில் சில இடையூறுகளை சந்திக்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.
கிடைக்கும் சிறு வாய்ப்புகளையும் சரியான முறையில் பயன்படுத்தினால் அனுகூலமான பலன்களை அடையலாம். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் செயல்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதன் மூலம் எதிர்பார்த்த உயர்வுகளை அடைய முடியும்.
பரிகாரம் – பிரதோஷ காலங்களில் விரதமிருந்து சிவ பெருமானையும் நந்தி பகவானையும் வழிபட்டு வந்தால் நல்லது நடக்கும். தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும்.
சந்திராஷ்டமம் – 15-10-2023 அதிகாலை 05.20 மணி முதல் 17-10-2023 பகல் 02.20 மணி வரை.
சுப முகூர்த்த நாட்கள்
01.10.2023 புரட்டாசி 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துவிதியை திதி ஹஸ்தம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் விருச்சிக இலக்கினம். தேய்பிறை
04.10.2023 புரட்டாசி 17 ஆம் தேதி புதன்கிழமை சஷ்டி திதி ரோகிணி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் விருச்சிக இலக்கினம். தேய்பிறை
18.10.2023 ஐப்பசி 01 ஆம் தேதி புதன்கிழமை சதுர்த்தி திதி அனுஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.00 மணிக்குள் விருச்சிக இலக்கினம். வளர்பிறை
20.10.2023 ஐப்பசி 03 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சஷ்டி திதி மூலம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 08.30 மணி முதல் 10.00 மணிக்குள் விருச்சிக இலக்கினம். வளர்பிறை
27.10.2023 ஐப்பசி 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சதுர்தசி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் விருச்சிக இலக்கினம். வளர்பிறை

