M. K. Stalin Talking About Chennai Floods : ஜெயலலிதாவிடம் அனுமதி கேட்க அதிகாரிகள் பயந்தனர்!

இவ்வளவு பெரிய மழை, வெள்ளம் வரும் என்று எச்சரிக்கை எதுவும் தரவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை: சென்னையில் திமுக நிர்வாகி பிகே மூர்த்தி இல்ல திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் பேசினார்.அப்போது சென்னையில் 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது. இவ்வளவு பெரிய மழை, வெள்ள பாதிப்பு வரும் என்று எச்சரிக்கை எதுவும் தரப்படவில்லை.

ஆட்சியில் இல்லாத போதும் கொரோனா காலத்தில் நிவாரண உதவிகளை திமுக வழங்கியது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் களப்பணியில் ஈடுபடும் இயக்கம் திமுக.2015- ஆம் ஆண்டு, முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 2015 ல் செம்பரப்பாக்கம் ஏரி தண்ணீர் திறப்புக்கு அனுமதி கேட்க ஜெயலலிதாவிடம் அதிகாரிகள் பயந்தனர்.

2015-ல் கொஞ்சம் கொஞ்சமாக ஏரியை திறந்திருந்தால் பலர் உயிரிழக்காமல் இருந்து இருப்பார்கள். ஆனால், செம்பரபாக்கம் ஏரி நீரை தொடர்ந்து கண்காணித்து சென்னையை காத்தது திமுக அரசு.” என்று பேசியுள்ளார்.மேலும் 2015 விட தற்போது அதிக மழை பெய்த போதிலும் மக்களை மீட்டுள்ளது திமுக அரசு.

தகுதியுள்ள அனைவருக்கும் ரூ.6 ஆயிரம் நிவாரண தொகை வழங்கப்படும்.மழை பாதிப்புகளை ஆய்வு செய்யும் மத்தியக்குழுவினரே தமிழக அரசை பாராட்டியுள்ளனர்.கொரோனா காலத்தில் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, மக்களை தேடி போய் உதவியது .திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக செயலாற்றும் கட்சி என்று முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *