மிலாது நபி 2026: தலைவர்களின் வாழ்த்துச் செய்தி.!

Advertisements

மிலாது நபியையொட்டி பிரதமர் மோடியும், முதலமைச்சர் விஜய்யும் மிலாது நபி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் மிலாது நபியையொட்டி, வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் மிலாத்-உன்-நபி திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வு நம்மிடையே ஒற்றுமையையும் மகிழ்ச்சியையும் மேலும் வளர்க்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இரக்க குணமும் சமுதாயத்திற்குத் திரும்பக் கொடுக்கும் எண்ணமும் எப்போதும் நம்மை வழிநடத்தட்டும் என்று தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், இறைத்தூதர் நபிகள் நாயகம் பிறந்த இந்நன்னாளில் தன் அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த இனிய மிலாது நபி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

மனிதகுலத்தின் மீது அன்பையும், ஏழை எளியோரின் மீது இரக்கத்தையும், அனைவரிடத்திலும் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் பேண வேண்டும் என இறைத்தூதர் நபிகள் நாயகம் போதித்த உயரிய நெறிகளைப் பின்பற்றி, உலகில் அன்பையும் நல்லிணக்கத்தையும் தழைக்கச் செய்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த நன்னாளில், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், நலமும், வளமும் நிறைந்திடட்டும் என்று தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *