
தற்போது இலங்கை சென்றிருக்கும் திவ்ய பாரதி தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய வீடியோக்களையும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டுள்ளார்.
கோவை மாவட்ட சேர்ந்தவர் நடிகை திவ்ய பாரதி மாடலிங் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் திவ்ய பாரதி.
இந்தப் படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார் திவ்ய பாரதி.
தனக்கென ஒரு தனி ரசிக பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இதைத் தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு மதில்மேல் பூனை என்ற படத்தில் அவர் நடித்திருந்தார்.
குறிப்பாக நடிகர் கதிர் இயக்கத்தில் உருவாகி வரும் ஆசை என்கின்ற திரைப்படத்திலும், பிரபல நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் கிங்ஸ்டன் என்ற படத்திலும், நடித்து வருகிறார்.
இதே போல் விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்திலும் திவ்யா பாரதி நடித்து வருகிறார். விஜய்யின் கோட் படத்திலும் அவர் சிறிய வேடத்தில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் திவ்ய பாரதி, அவ்வபோது தனது புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார். குறிப்பாகக் கவர்ச்சி போட்டோக்களைப் பதிவிட்டு தனது ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது இலங்கை சென்றிருக்கும் திவ்ய பாரதி தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய வீடியோக்களையும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டுள்ளார்.
அவரின் இந்தப் போட்டோகளுக்கு லைக்களும், கமெண்ட்களும் குவிந்து வருகின்றன. இந்தப் போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

