
சென்னை:
ஏழைகளுக்கு அதிகாரமளிக்கவும், சிறந்த சமுதாயத்தைக் கட்டமைக்கவும் எம்ஜிஆர் மேற்கொண்ட முயற்சிகளால் நாம் பெரிதும் உத்வேகம் அடைந்துள்ளோம் எனத் தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அறிக்கை வெளியிட்டுள்ளார்
இது தொடர்பாகப் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”எம்ஜிஆர் பிறந்த நாளில் அவருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன்.
ஏழைகளுக்கு அதிகாரமளிக்கவும், சிறந்த சமுதாயத்தைக் கட்டமைக்கவும் அவர் மேற்கொண்ட முயற்சிகளால் நாம் பெரிதும் உத்வேகம் அடைந்துள்ளோம்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும், எம்ஜிஆர் குறித்த பெருமைகளைப் பேசும் வீடியோ தொகுப்பையும் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.
எம்ஜிஆர் பிறந்த நாளான ஜனவரி 17ம் நாள், ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் அரசு விழாவாகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
