Meenakshi College For Women: அரசு கல்லுாரி ஆசிரியர்கள் அறிவிப்பு!

தமிழக அரசு கலைக் கல்லுாரிகளில் காலியாக உள்ள 8 ஆயிரம் ஆசி ரியர் பணியிடங்களை நிரப்ப கோரி ஜனவரியில் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என, அரசு கல்லுாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் டேவிட் லிவிங்ஸ்டன் தெரிவித்தார்.

மதுரையில் அரசு கல்லுாரி ஆசிரியர் கழக மாநில செயற்குழுக் கூட் டம் மீனாட்சி அரசு மகளிர் கல்லுாரியில் நடந்தது. இதில் பொதுசெயலர் சுரேஷ், துணை தலைவர்கள் கோபாலகிருஷ்ணன், மதுரம்,இணை செயலாளர் மஞ்சுநாதன், பொருளாளர்பிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது டேவிட் லிவிங்ஸ்டன் கூறியதாவது: தமிழக அரசு கலைக் கல்லுாரிகளில் டி.ஆர்.பி., மூலம் 4 ஆசி ரியர்கள் நியமனம் குறித்த அறிவிப்பு 13 மாதங்க ளுக்கு முன் வெளியாகி இதுவரை நடவடிக்கை இல்லை. இதை வலியு றுத்தி கல்லுாரி ஆசிரியர் கள், மாணவர்கள் சார்பில் ஜன. 2 முதல் 5 வரை கையெழுத்து இயக்கம் நடத்தப்படும்.

அரசு கல்லுாரிகளில் மாற்றுப் பணியில் நியமிக் கப்பட்டவர்களை உடனே விடுவித்து அந்த இடங் களில் புதிய ஆசிரியர் களை நியமிக்க வேண்டும். அண்ணாமலை பல் கலையில் இருந்து அரசு கல்லுாரிகளில் நியமிக் கப்பட்ட உதவி பேராசி ரியர்களை மீண்டும் பல் கலை அழைத்துக்கொள்ள வேண்டும்.

டிச. 28ல் நடக்கும் ஜாக்டோ ஜியோ மறியல் போராட்டத்தில் கல்லுாரி பேராசிரியர்கள் 3 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளோம். தமிழகத்தில் அரசு கல்லுா ரிகளில் உள்ள 8 ஆயிரம் காலிப் பணியிடங்கள் தாம தமின்றி நிரப்ப வேண் டும். அரசு கல்லுாரி ஆசி ரியர்களுக்கான எம்.பில்., பிஎச். டி., படிப்புக்கான ஊக்கத்தொகை வழங்க வேண்டும். என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *