Bigg Boss Tamil 7: முதல் ப்ரோமோ வெளியிடு!

29வது நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியிடு!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் 29வது நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் பல எதிர்பாராத காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரையும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணி முதல் 11 மணி வரையும் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியை 7வது ஆண்டாக நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சிக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த நிகழ்ச்சியில் 29வது நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதன்படி பிக்பாஸ் வரலாற்றில் இல்லாத அளவுக்கு வைல்ட் கார்டு போட்டியாளர்களாக பாடகர் கானா பாலா, பட்டிமன்ற பேச்சாளர் அன்ன பாரதி, விஜே அர்ச்சனா, நடிகர் தினேஷ் காமராஜ், ஆர்.ஜே.பிராவோ என 5 பேர் ஒரே நேரத்தில் உள்ளே நுழைந்துள்ளனர். இன்றைய ப்ரோமோவில் இவர்கள் 5 பேரும் அப்படியே ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இவர்களுடன் 6 வது நபராக விசித்ராவும் கேப்டன் பூர்ணிமா ரவியால் அனுப்பப்படுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *