பிரபல மலேசிய தொழிலதிபர் காலமானார்!

Advertisements

சென்னை: 

Advertisements

பிரபல மலேசிய தொழிலதிபர் ஆனந்த கிருஷ்ணன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 86.

மலேசியாவில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் ஆனந்த கிருஷ்ணன். யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழர். ஆஸ்திரேலியாவிலும், பின்னர் அமெரிக்காவிலும் படித்துப் பட்டம் பெற்றவர். சிறு வயது முதலே பல்வேறு தொழில்களைத் தொடங்கிய இவர், மலேசியாவின் நான்காவது பெரிய பணக்காரர் என்ற அளவுக்குச் சொத்துக்களை குவித்தார்.

இவரது சொத்து மதிப்பு 45 ஆயிரம் கோடி ரூபாய். இவர் தொலைத்தொடர்பு, செயற்கைக்கோள்கள், எண்ணெய், ரியல், எஸ்டேட், காஸ் எனப் பல்வேறு துறைகளில் தொழில் நடத்திய ஜாம்பவான் ஆனந்தகிருஷ்ணன்.

இவர் கலை, கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளுக்கு அளித்த நன்கொடை ஏராளம். இவருக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவரது மகன் வென் அஜான் சிரிபான்யோ, சில ஆண்டுகளுக்கு முன், பவுத்த துறவியாக மாறி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.ஆனந்தகிருஷ்ணன், 86, நேற்று கோலாலம்பூரில் காலமானார். அவரது மறைவுக்கு தொழில் துறையினர், அரசியல் பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *