Mahatma Gandhi birthday:மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி மரியாதை!

மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தியின் 156-வது பிறந்தநாளையொட்டி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள் காலை முதலே நேரில் வந்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அவ்வகையில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னதாக மகாத்மா காந்தி நினைவிடத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.டெல்லி முதல்வர் அதிஷி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோரும் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *