
பிரபல நடிகர் விஷால் நடிக்கும் ‘மகுடம்’ திரைப்படம் அடுத்த மாதம் 14 ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பிரபல நடிகர் விஷால் ‘மகுடம்’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இதில், துஷாரா விஜயன், அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகர் விஷால் இயக்கத்தில் இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், ‘மகுடம்’ படத்தின் புது பாடலான ‘கலங்காதே’ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. மேலும் படம் அடுத்த மாதம் 14-ந்தேதி வெளியாகும எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். பாடல் வெளியீடு தொடர்பான ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ள நிலையில் நடிகர் விஷாலின் ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



