‘மாவீரன்’ திரைப்படத்திற்கு சம்பளம் வாங்காமல் பணியாற்றிய நடிகர் விஜய்சேதுபதி !

Advertisements

‘மாவீரன்’ திரைப்படத்திற்காக நடிகர் விஜய்சேதுபதி சம்பளம் வாங்காமல் பணியாற்றி உள்ளார்.

மடோனா அஸ்வின் இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மாவீரன்’. படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்தநிலையில், கதையில் சிவகார்த்திகேயன் கதாபாத்திரத்தை வழிநடத்தும் குரலாக விஜய்சேதுபதி இந்தப் படத்தில் பங்களிப்பு செய்திருக்கிறார். இதனை பட வெளியீட்டிற்கு சில நாட்களுக்கு முன்பு படக்குழு தெரிவித்து இருந்தது. இதனை அடுத்து படத்திலும் விஜய்சேதுபதியின் குரலுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது.

தற்போது படத்தில் குரல் கொடுத்ததற்காக நடிகர் விஜய்சேதுபதி எந்தவிதமான சம்பளமும் வாங்கிக் கொள்ளவில்லை எனவும், இயக்குநர் மடோனா அஸ்வினுடனான நட்பிற்காகவே இதை விஜய்சேதுபதி செய்திருக்கிறார் எனவும் படக்குழு தற்போது அறிவித்துள்ளது. ‘மாவீரன்’ படத்தை முடித்து விட்டு நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வரும் புதிய படத்திற்காக தற்போது காஷ்மீர் சென்றுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *