
சென்னையில் இருந்து, இன்று ஒரே விமானத்தில் தமிழகஒரே விமானத்தில் ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின் இருவரும் ஒரே விமானத்தில் கோவை செல்கின்றனர்.
தமிழக ஆளுநர் ரவி, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடில் உள்ள கல்வி நிறுவன விழாவில் பங்கேற்க, சென்னையில் இருந்து இன்று விமானம் வாயிலாக கோவை செல்கிறார். இதனையடுத்து பீளமேடு விமான நிலையத்தில் இருந்து காரில், திருச்செங்கோடு செல்கிறார். இதே விமானத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலினும் செல்கிறார்.
இவர், கோவையில் செம்மொழி பூங்கா திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுதல், மக்களுடன் முதல்வர் திட்டம் துவக்கி வைக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இருவருக்கும், விமான நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளித்து, காலை உணவு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் ரவி, விமான நிலைய வளாகத்திலேயே, உட்கொள்ள திட்டமிட்டு, நேரம் ஒதுக்கி இருக்கிறார். விமானத்தில் இருந்து இறங்கி, டைனிங் பகுதிக்கு ஆளுநர் சென்றதும், முதல்வரை வரவேற்று அழைத்துச் செல்ல, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு, ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியது தொடர்பாக, முதல்வரை அழைத்து பேச, கவர்னருக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியது. அதையேற்று, முதல்வருக்கு ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார்.
தற்போது, தற்செயல் நிகழ்வாக, ஆளுநரும், முதல்வரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளவும், உரையாடவும் வாய்ப்பு உருவாகி உள்ளது. இருவரும் பேசிக் கொள்வார்களா? என்ற எதிர்பார்ப்பு, அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டிருக்கிறது.

