Lok Sabha Election 2024: கட்டுக்கடங்காத ரசிகர்கள்.. வாக்குப்பதிவு செய்யத் திணறிய விஜய்!

சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் தனது வாக்கினை பதிவு செய்தார்.நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழக கட்சி தொடங்கிய பிறகு முதல் முறையாக வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களவை தேர்தல் இன்று நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.வாக்குப்பதிவிற்காகக் காலை முதலே அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர்களும் வாக்களித்து வருகின்றனர்.

அதன்படி, நடிகர் அஜித், ரஜினிகாந்த், கார்த்திக், பிரபு, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.
இந்நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வருகை தந்தார்.

விஜய் வருகையால், வாக்குச்சாவடியில் கூட்டம் அலைமோதியது.பின்னர், பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்ட விஜய் வாக்குச் சாவடிக்குள் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார்.நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழக கட்சி தொடங்கிய பிறகு முதல் முறையாக வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *