Lok Sabha Election 2024: காலையிலேயே சுடச்சுட கறி குழம்பு, சூடான இட்லியுடன் துவங்கிய பிரச்சாரம்!

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக வேட்பாளர்,  க. செல்வம் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது கலைஞர், ஸ்டாலின், கமல் வேடம் அடைந்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர்.

மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. பிரச்சாரத்திற்கு குறைந்த நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், முக்கிய கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக வேட்பாளர்,  க. செல்வம் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

முன்னதாகக் காலையிலேயே கட்சி தொண்டர்கள் மற்றும் தனது ஆதரவாளர்களுக்கு வெங்கடாவரம் பகுதியில் சுட சுட இட்லி மற்றும் சுடச்சுட கறி குழம்புகளுடன் காலை உணவு பரிமாறப்பட்டு பிரச்சாரத்தைத் துவங்கினார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் திமுக கட்சி கொடிகளை ஏந்தி மற்றும் அதன் கூட்டணி கட்சி கொடிகளை ஏந்தி ஊர்வலமாக வந்த செல்வம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளைச் சேகரித்தார்.

காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட பகுதிகளான வேதாச்சலம் நகர், பல்லவன் நகர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதி, எல்லப்பன் நகர், செவிலிமேடு, உள்ளிட்ட 20-கும் மேற்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மேலும் பிரச்சாரத்தில் மக்களைக் கவரும் வகையில், மறைந்த முதலமைச்சர் கலைஞர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் வேடமிட்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளைக் கேட்டார். வழியெங்கும் கட்சி நிர்வாகிகள் வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *