Lok Sabha Election 2024: 100 கிலோ எடை கொண்ட ரோஜா பூ மாலை… அதிமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு!

100 கிலோ எடை கொண்ட ரோஜா பூ மாலை ஜேசிபி இயந்திரம் மூலம் கொண்டு வந்து அதிமுக வேட்பாளருக்கு அணிவித்து அதிமுகவினர் உற்சாக வரவேற்பு.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதி அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராஜசேகர் வெற்றி பெற தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று வாலாஜாபாத்துக்கு உட்பட்ட அய்யம்பேட்டை, ஏகனாம்பேட்டை, முத்தியால்பேட்டை, தாங்கி, வென்குடி, வில்லிவளம், மேல் ஒட்டிவாக்கம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இன்று இரட்டை இலை சின்னத்தை வாக்களித்து அதிமுக வேட்பாளரை வெற்றி பெற கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
ஏனெனில் வில்லிவளம் கிராமத்திற்கு வருகை தந்த அதிமுக வேட்பாளர் ராஜசேகருக்கு அப்பகுதி அதிமுகவினர் 100 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட ரோஜா பூ மாலை ஜேசிபி இயந்திரம் மூலம் கொண்டு வந்து வேட்பாளர் ராஜசேகருக்கு அணிவித்து வரவேற்றனர்.
கிராம கிராமங்களாக கிராம மக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் வேட்பாளருடன் முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம், அதிமுக அமைப்புச் செயலாளர் வலதாபாத் கணேசன், எஸ்.எஸ்.ஆர். சத்யா உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *