Lockup death : “மதுரை மாவட்ட நீதிபதி உடனடியாக நீதி விசாரணை தொடங்க வேண்டும்”

Advertisements

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரத்தில் கோயில் காவலாளியாகப் பணியாற்றி வந்தவர் அஜித்குமார். சாமி கும்பிட வந்த நிக்கிதா என்ற பெண்ணின் காரில் இருந்த நகை மற்றும் பணம் காணாமல் போனது தொடர்பாக காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இவர், காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டு பரிதாபமாக பலியானார்.

இளைஞர் மரணம் தொடர்பாக திருப்புவனம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கார்த்திக் ராஜா, சிவகாசி வழக்கறிஞர் மாரீஸ்குமார் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதிகள் சுப்பிரமணியம் மற்றும் மரியா கிளீட் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று காலை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், நகை திருட்டு வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாதது ஏன்? யாருடைய உத்தரவினால் வழக்கு தனிப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது? தனிப்படையினர் யார் சொல்லி, எதன் அடிப்படையில் இந்த வழக்கை கையில் எடுத்தனர்? உயர் அதிகாரிகளை காப்பாற்ற வேண்டும் எனக் உண்மையை மறைக்கக் கூடாது.

நீதித்துறை நடுவர் உடனே விசாரணையைத் தொடங்க வேண்டும் என உத்தரவிட்டு, பிற்பகல் 3 மணிக்கு பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் மாஜிஸ்திரேட் அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், காவல்துறையினர் இளைஞர் அஜித்குமாரை தாக்கும் வீடியோவை தாக்கல் செய்த சக்தீஸ்வரன் என்பவர் மாலை நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு, மாலை 3 மணிக்கு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இறப்பு வரை எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படவில்லை. சாதாரண கொலை வழக்கு போல் இல்லை. அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். உடலில் 44 இடங்களில் காயங்கள் உள்ளன. பிரேதப் பரிசோதனை அறிக்கையைப் பார்க்கும்போதே அதிர்ச்சியாக உள்ளது.போலீஸ் கூட்டாகச் சேர்ந்து இந்த சம்பவத்தை அரங்கேற்றி உள்ளது. மாநிலம் தன் குடிமகனையே கொலை செய்துள்ளது. கோயில் சிசிடிவி எங்கே? எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு கோயில் சிசிடிவி காட்சிகளை எஸ்.ஐ. ராமசந்திரன் எடுத்துச் சென்றுள்ளார் என கோயில் உதவியாளர் சாட்சியம் தெரிவித்தார்.திருப்புவனம் காவல் ஆய்வாளர், எஸ்.பி. உள்ளிட்டோர் வழக்கு தொடர்பான ஆவணங்களை மதுரை மாவட்ட நீதிபதியிடம் வழங்க வேண்டும். அனைத்து ஆவணங்களையும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் பாதுகாப்பாக்க வைத்திருக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் ஜூலை 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தன

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *