
கடந்த ஒரு மாதமாகச் சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் லீ ஷாங் பூ மாயமானது குறித்து தங்களுக்கு எதூவும் தெரியாது என்று சீன அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனா: சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் லீ ஷாஃங் பூ ஒரு மாதமாக எந்தவொரு பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை. இதுகுறித்து செய்தியளார்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்துப் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சக தகவல் தொடர்பு அலுவலக இயக்குனர் லீ ஷாஃங்பு, அதுகுறித்து தனக்கு எதுவும் தெரியாது என மெத்தனமாகக் கூறியுள்ளார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற சீன ராணுவத்தின் தலைமைப் பீடமான, மத்திய ராணுவ ஆணையம் நடத்திய கூட்டத்தில், லீ ஷாஃங் பூ இடம் பெறாததால், அவர் மாற்றப்பட்டிருக்கலாமெனச் சந்தேகம் எழுந்துள்ளது. அரசு தரப்பிலிருந்தும் எந்தவொரு விளக்கமும் இதுவரை அளிக்கப்படவில்லை.
மாவோவுக்குப் பிறகு மிகவும் சக்தி வாய்ந்த தலைவரான ஷி-ஜின் – பிங் க்கு நெருக்கமானவரான லீ ஷாஃங் பூக்கடந்த 7 மற்றும் 8 தேதிகளீல் நடைபெற்ற ராணுவ உயர் அதிகாரிகள் சந்திப்பிலும் இடம் பெறவில்லை.
ஏற்கனவே, வெளியுறவுத்துறை அமைச்சர் கின் காங் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்ததும், பின்னர் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார் என்றும் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அதே போலப் பாதுகாப்புத் துறை அமைச்சர் லீ ஷாஃங் பூக்காணாமல் போயிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


