
தி.மு.க., எம்.பி. ராஜா மிகப் பெரிய ஊழல் வாதி!
ஊட்டி: தி.மு.க., எம்.பி., ஆ.ராஜா மிகப்பெரிய ஊழல்வாதி எனவும், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஊழல் செய்தவர் எனவும் மத்திய அமைச்சர் எல். முருகன் குற்றம் சாட்டி உள்ளார். L. Murugan
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் புதிய பா.ஜ., அலுவலக திறப்பு விழாவில் எல்.முருகன் பங்கேற்றார். பின்னர் அவர் அளித்த பேட்டி: மத்திய அரசு அனைவருக்கும் வீடு, வீடு வீடாகத் தண்ணீர் கொடுக்கும் திட்டம் என, எண்ணற்ற திட்டங்களைச் செயல் படுத்தியுள்ளது.
தி.மு.க., எம்.பி. ராஜா மிகப் பெரிய ஊழல் வாதி. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஊழல் செய்தவர். 2ஜி ஊழலைத் தொடர்ந்து அமலாக்கத்துறை சொத்துக்களை முடக்கம் செய்துள்ளனர்.தூய்மையான அரசு வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். இவ்வாறு எல்.முருகன் கூறினார். L. Murugan



