Kodaikanal: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

Advertisements

தோட்டக்கலை துறையால் பராமரிக்கப்படும் ரோஜா பூங்காவில் பூக்கள் இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.இதனால் சுற்றுலா பயணிகள் அங்குச் செல்ல ஆர்வம் காட்டவில்லை.

திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது மலைகளின் இளவரசியான கொடைக்கானல், இயற்கை அழகையும் இதமான கால சூழ்நிலையும் பசுமை போர்த்திய புல்வெளிகளையும் எங்குப் பார்த்தாலும் பறந்து விரிந்த காணப்படும் பனி மேகங்களையும் கண்ணைக் கவரும் பல்வேறு வகையான பூக்களையும் காண்பதற்கு தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்கள் பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர், அதேபோல் வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்,

தற்போது மழைக்காலம் பனிக்காலம் முடிந்து வெயில் காலம் ஆரம்பித்து உள்ள நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை கொடைக்கானலில் அதிகரித்துள்ளது, சுற்றுலா தளங்களிலும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் சுற்றுலா தளங்களைப் பார்வையிடுவதற்காக வருகின்றன, இந்நிலையில் தோட்டக்கலை துறையால் பராமரிக்கப்படும் ரோஜா பூங்காவில் ஆயிரக்கணக்கான இந்தியாவில் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட ரோஜா மலர்கள் சுற்றுலா பயணிகளைக் கவர்ந்திழுக்கும்.

தற்போது ரோஜா பூங்காவில் பூக்கள் எதுவும் இல்லை ஆனால் நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு 30 ரூபாய் சிறியவர்களுக்கு 15 ரூபாயென வசூல் செய்யப்படுகிறது.

ரோஜா பூங்காவில் பூக்கள் இல்லாத சுற்றுலா பயணிகளிடம் ஆர்வமும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *