Kamakshi Amman Temple: காமாட்சி அம்மனை வழிபட்ட இஸ்லாமியர்கள்!

மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் காமாட்சி அம்மனுக்கு காஞ்சிபுரம் தர்காக நிர்வாகம் சார்பில் இஸ்லாமியர்கள் ரோஜா பூக்கள், வாசனை பூக்கள், பன்னீர் போன்றவை காமாட்சி அம்மனுக்கு தூவி மரியாதை செலுத்தி  வழிபாடு செய்தனர்.

சக்தி பீடங்களில் முதன்மையாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் மாசி மகா பிரம்மோற்சவம் கடந்த மாதம் 15 ஆம் தேதி தொடங்கி காலை மற்றும் மாலை வேலைகளில் பல்வேறு வாகனங்களில் காமாட்சி அம்மன் எழுந்தருளி வீதி உலா விமர்சையாக நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் நிறைவு விழாவாக இன்று காமாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் புஷ்ப பல்லாக்கு நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது.

காமாட்சி அம்மன் லட்சுமி சரஸ்வதி உடன் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லாக்கில் எழுந்தருளிப் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். பின் கோவில் இருந்து புறப்பட்டுச் சன்னதி தெரு, பேருந்து நிலையம், நான்கு ராஜவீதி வழியாக வலம் வந்து பக்தர்களுக்குக் காட்சி அளித்தார்.

இந்நிலையில் ஆண்டுதோறும் நடைபெறும் புஷ்ப பல்லாக்கு உற்சவத்தில் போது பெரிய காஞ்சிபுரம் தர்காவில் சார்பாக மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் காமாட்சி அம்மனுக்கு தர்காக நிர்வாகம் சார்பில் நிர்வாகிகள் ரோஜா பூக்கள், வாசனை பூக்கள், பன்னீர் போன்றவை காமாட்சி அம்மனுக்கு தூவி மரியாதை செலுத்தி வணங்கிச் சென்றனர், ஆண்டு தொடரும் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் நடைபெறும் நிகழ்வு பழமை மாறாமல் இன்றும் தொடர்ந்து கடைபிடித்து வரும் செயல் அனைவரும் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *