வங்கி கணக்கில் ரூ 1. வந்துவிட்டதா? உங்களுக்கு ரூ1000  கன்பார்ம்!

Advertisements
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக இணைந்தவர்களுக்கு வருகிற டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி வங்கி கணக்குகளில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட உள்ளது தற்பொழுது புதிய பயனாளிகளின் வங்கி கணக்கில் முதலில் ஒரு ரூபாய் அனுப்பி பரிசோதிக்கும் பணிகள் தொடங்கிவிட்டன
உங்கள் வங்கி கணக்கில் ஒரு ரூபாய் வந்திருந்தால் உங்களுக்கு மாதம் போதும் ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்பதை உறுதி செய்து கொள்ளலாம்
இது பற்றி ஜெம் தொலைக்காட்சி வழங்கும் சிறப்புச் செய்தி தொகுப்பை இப்போது பார்க்கலாம்
தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது பெண்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது இதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு சார்பில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையாக தகுதியான பெண்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது
மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டதால் பல லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது
இதனைத் தொடர்ந்து புதிதாக ரேஷன் கார்டு வாங்கியவர்கள் மற்றும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டவர்கள் என ஏராளமான பெண்கள் புதிதாக மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்தனர் புதிதாக விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பம் மீதான பரிசோதனை நடந்து கொண்டிருப்பதால் அவர்கள் தங்களுக்கு எப்போது மகளிர் உரிமை தொகை கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தனர்
இந்த நிலையில் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்குமகளிர் உரிமைத்தொகை வரும் டிசம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் வழங்கப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார் இதனால் உரிமை தொகை திட்டத்திற்கு புதிதாக விண்ணப்பித்த பெண்கள் மகிழ்ச்சியில் இருந்து வருகிறார்கள்
உரிமைத் தொகை திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட பெண்களுக்கு அரசு சார்பில் அவர்களது வங்கி கணக்குக்கு ஒரு ரூபாய் அனுப்பப்படும். கடந்த முறையும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட பெண் பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு முதலில் ஒரு ரூபாய் அனுப்பப்பட்டது
அப்படி யாருக்கெல்லாம் ஒரு ரூபாய் வரவு வைக்கப்பட்ட குறுஞ்செய்தி வந்திருக்கிறதோ அவர்கள் எல்லாம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் என பெண்கள் அறிந்து கொள்ளலாம்
அதாவது உங்கள் வங்கி கணக்குக்கு ஒரு ரூபாய் அனுப்பிய தகவல் உங்கள் கைபேசியில் குறுஞ்செய்தியாக வரும் அதனையும் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்
தற்பொழுது பெண் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் ஒரு ரூபாய் அனுப்பப்பட்டு வங்கி கணக்கு செயல்பாட்டில் உள்ளதா என பரிசோதிக்கப்பட்டு வருகிறது
எனவே இன்று முதல் உங்களுக்கு ஒரு ரூபாய் குறித்த குறுஞ்செய்தி வருகிறதா என்று பாருங்கள் அப்படி வந்தால் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் பெறுவதற்கு நீங்கள் தேர்வு பெற்று விட்டீர்கள் என்பது பொருளாகும்
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *