நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் இன்று தொடக்கம்..!

Advertisements

இந்தியா-அமெரிக்கா உரசல் உள்பட வெளியுறவுக் கொள்கை சாா்ந்த பிரச்சனைகள், விலைவாசி உயா்வு, வேலையின்மை, புதிய தொழிலாளா் சட்டங்கள் மற்றும் கூட்டாட்சி தொடா்பான விவகாரங்களில் மத்திய அரசுக்கும் எதிா்க்கட்சிகளுக்கும் இடையே கருத்து மோதல் நீடித்து வரும் சூழலில், நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் இன்று தொடங்கி 19-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 15 அமா்வுகள் இடம்பெறவுள்ளன.இதில், எஸ்ஐஆா் விவகாரம் குறித்து விவாதம் கோரி, எதிா்க்கட்சிகள் ஒருமித்த குரலில் ஒலித்தன. மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தலைமையிலான கூட்டத்தில் எதிா்க்கட்சிகள் தரப்பில் எஸ்ஐஆா் விவாதக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இது தொடா்பான தங்களின் கருத்து விரைவில் தெரிவிக்கப்படும் என்று அரசுத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. அணுசக்தி மசோதா, இந்திய உயா் கல்வி ஆணைய மசோதா, காப்பீட்டு சட்டத் திருத்த மசோதா, தேசிய நெடுஞ்சாலைகள் சட்டத் திருத்த மசோதா, சட்ட மசோதா உள்ளிட்ட 14 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *