Kabaddi Tournament: வெற்றி வாகை சூடிய MYC முகப்பேர் அணி!

Advertisements

திருவள்ளூர் மாவட்டம் பட்டபிராமில் மாவட்ட அளவிலான கபடி போட்டிகள் நடைபெற்றன.இதில் சென்னை MYC முகப்பேர் அணி முதலிடமும், பட்டாபிராம் சுரேஷ் மெமோரியல் அணி இரண்டாம் இடத்தைப் பிடித்து அசத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம் பட்டபிராமில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது .இதில் அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பலவேறு மாவட்டங்களைச் சேர்ந்த 32 அணிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டனர் .போட்டிகள் நாக்கவுட் முறையில் கால் இறுதி, அரை இறுதியென நடைபெற்றது .பங்கேற்ற அணி வீரர்கள் ஒவ்வொருவரும் தங்கள் அணி கடுமையாக விளையாடினர்.நாகவுட் முறையில் நடைபெற்ற போட்டிகளில் அனைத்து சுற்றுகளிலும் வெற்றி பெற்ற MYC முகப்பேர் அணியும் – பட்டாபிராம் சுரேஷ் மெமோரியல் அணியும் இறுதி போட்டியில் பலப்பரிட்சை செய்தன.

இரு அணி வீரர்களும் மாறி மாறிப் புள்ளிகளைக் குவித்து வந்தன. ஆரம்பமுதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய MYC முகப்பேர் அணி எதிரணியினரை ஒரு கட்டத்தில் புள்ளிகள் பெற விடாமல் தடுத்து 23 க்கு 11 என்ற புள்ளி கணக்கில் வெற்றி வாகை சூட்டினர்.கபடி போட்டியில் முதலிடம் பிடித்த MYC முகப்பேர் அணிக்கு 15000 ரொக்க பரிசு மற்றும் 6 அடி உயர கோப்பையும், இரண்டாம் இடம் பிடித்த பட்டாபிராம் சுரேஷ் மெமோரியல் அணிக்கு ரூபாய் 10000 மற்றும் 5அடி கோப்பையும் வழங்வழங்கப் பட்டதுக பட்டது.குறிப்பாகப் பட்டாபிராம் ஆவடி மாநகராட்சி உயர்நிலை பள்ளி 4ம் பரிசினை தட்டி சென்றது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *