கோவாவில் 56 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா..!

கோவா தலைநகர் பனாஜியில் 56 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்குகிறது. கோவா தலைநகர் பனாஜியில் 56 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா இன்று கோலாகலாக தொடங்குகிறது. இவ்விழாவில் , 81 நாடுகளைச் சேர்ந்த 240-க்கும் அதிகமான படங்கள் திரையிடப்பட உள்ளன.

இதை தொடர்ந்து, தமிழகத்தில் இருந்து இரண்டு திரைப்படங்கள் மற்றும் ஒரு குறும்படம் ஆகியவை தேர்வாகியுள்ள நிலையில் சிவகார்த்திகேயனின் ’அமரன்’, நடிகர் அப்புக் குட்டியின் ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ மற்றும் இ.வி.கணேஷ்பாபு இயக்கி நடித்துள்ள ‘ஆநிரை’ என்ற குறும்படம் ஆகியவை இந்த விழாவில் திரையிடப்பட உள்ளன.

மேலும், இவ்விழாவில் திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள தமிழக நடிகர் ரஜினிகாந்துக்கு கவுரக்கிப்படுகிறார். இதை தொடர்ந்து, இந்திய திரைப்பட விழாவில், மறைந்த திரைப்பட இயக்குநர்கள் குரு தத், ராஜ் கோஸ்லா ஆகியோரின் நூற்றாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *