K. P. Anbalagan Latest: தர்மபுரி நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ஆஜர்!

Advertisements

சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்காக தர்மபுரி நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆஜரானார். வருமானத்திற்கு அதிகமாக ரூ.45.20 கோடி அளவுக்கு சொத்துக்கள் சேர்த்துள்ளதாக அன்பழகன், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் மீது கடந்தாண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக கடந்த மே மாதம் தர்மபுரி நீதிமன்றத்தில் இதற்கான குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை கடந்த 6ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் கே.பி.அன்பழகன் ஆஜரானார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *