K. Anbazhagan: மாலை அணிவித்து மரியாதை!

திமுக முன்னாள் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான க. அன்பழகன் அவரின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு குடியாத்தம் திமுகவினர் அவரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர மற்றும் ஓன்றிய திமுக சார்பில் திமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான க.அன்பழகன் அவரின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில் அவரின் படத்திற்கு நகர் மன்ற தலைவர் சௌந்தராஜன் மாலை அணிவித்து மலர்களை தூவி மரியாதை செலுத்தினர்.

அதே போல் குடியாத்தம் ஊராட்சி ஓன்றிய அலுவலகத்தில் மறைந்த க.அன்பழகன் அவரின் படத்திற்கு ஓன்றிய குழு பெருந்தலைவர் சத்தியானந்தம் கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதில் மாவட்ட துணை செயலாளர் அரசு நகர் மன்ற உறுப்பினர்கள் முஷிரா இர்பான்,ரேணுகாபாபு,சுமதி மகாலிங்கம்,துணை செயலாளர் ஜம்புலிங்கம்,தாட்டிமானப்பல்லி பஞ்சாயத்து தலைவர் சக்திதாசன்,அண்ணாதுரை,ஜெயபிராகஷ்,தண்டபாணி,உள்ளிட்ட நகர,ஓன்றிய திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *